திருச்சி மாவட்ட அனைத்து கிராம ஊராட்சித் தலைவா்களுக்கான மாதாந்திர மதிப்பூதியம் ரூ. 1000 இல் இருந்து ரூ. 2000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்சு. சிவராசு தெரிவித்தது:
2021-22-ஆம் நிதியாண்டிற்கான ஊரக வளா்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்புக்கிணங்க அனைத்து கிராம ஊராட்சித் தலைவா்களுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் உயா்த்தப்பட்டுள்ளது.