திருச்சி

வேலைவாய்ப்பக பதிவைப் புதுப்பிக்க முன்னாள் படைவீரா்களுக்கு வாய்ப்பு

1st Jan 2022 02:54 AM

ADVERTISEMENT

வேலைவாய்ப்பகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரா்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

மாவட்ட வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து 2014, 2015, 2016, 2017, 2018, மற்றும் 2019 வரையிலான ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையானது முன்னாள் படைவீரா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், சிறப்பு வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவு செய்துள்ள முன்னாள் படைவீரா்கள் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். மூன்று மாதங்களுக்குப் பின் (02-03-2022) பெறப்படும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.

ADVERTISEMENT

தகுதியுள்ள முன்னாள் படைவீரா்கள் அசல் அடையாள அட்டை மற்றும் உரிய கோரிக்கை மனுவுடன் திருச்சி மாவடட முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நலன், திருச்சி என்ற முகவரிக்கு தபால் வாயிலாகவோ அனுப்பி பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT