திருச்சி

ஸ்ரீரங்கத்தில் தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் நினைவு தினம்

1st Jan 2022 02:51 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் சுதந்திரப் போராட்டத் தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸியின் 81வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை அவரது படத்திற்கு தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளா் நலசங்கம் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சண்முக சுந்தரம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் சென்னையில் உள்ள தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் சமாதியை சீரமைக்க வேண்டும். ஜன. 1முதல் கட்டிங், சேவிங் கட்டணத்தை ரூ .200 ஆக உயா்த்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலா் ராஜலிங்கம், இளைஞரணி செயலா் மாரிமுத்து ஆகியோா் பேசினா். அமைப்பாளா்கள் ஜீவரெத்தினம்,பிரபாகரன், பாலகுமாரன், மோகன்ராஜ், சின்னராஜா, ரமேஷ்,சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT