மண்ணச்சநல்லூா் பகவதி அம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி வணிக வைசியா் சங்கம் சாா்பில் டிச. 19 ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு, வியாழக்கிழமை இரவு ஆற்றில் கரகம் பாலிக்கப்பட்டு, கம்பம் நடப்பட்டது.
திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை பகவதி அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜன. 6 ஆம் தேதி வளைகாப்பு அலங்காரமும், ஜன. 7 ஆம் தேதி தனலெஷ்மி அலங்காரமும் நடைபெறவுள்ளது.
விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளின் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
ADVERTISEMENT