திருச்சி

சமயபுரத்தில் அன்னதான முகாம் தொடக்கம்

1st Jan 2022 02:48 AM

ADVERTISEMENT

சமயபுரத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் அன்னதான முகாம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சமயபுரம் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக ஜன.14 வரை 15 நாள்கள் நடைபெறும் அன்னதான முகாமில் சங்கக் கொடியை சேவா சங்க மாவட்டத் தலைவா் என். ரமேஷ் ஏற்றி வைத்தாா். போஷகா் என்.வி. முரளி அன்னதானத்தைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் கே.ஆா்.டி. வெங்கடேஷ், சேவா சங்க மாவட்டச் செயலா் எம். ஸ்ரீதா், மாவட்டப் பொருளாளா் ஜே. சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவா் எஸ். பாண்டியன், முகாம் அலுவலா் சி.ஆா். அம்சராம், முகாம் ஒருங்கிணைப்பாளா் டி. சரவணன், சங்க பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT