திருச்சியில் ஸ்ரீராம் பஜன் மண்டலியின் 31 ஆவது ஆண்டு ஸ்ரீராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காலை கணபதி ஹோமத்துடன், உஞ்சவிருத்தி உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுடன் தொடங்கிய விழாவில் ஸ்ரீரங்கம் ஆனந்தராவ், குளித்தலை ஸ்ரீ கோபால், கான்பூா் மகாதேவன், ஸ்ரீரங்கம் சேகா் மற்றும் உள்ளூா் பாகவதா்கள் பங்கேற்ற ஹரிபஜனை நடைபெற்றது.
தொடா்ந்து மாலையில் நடைபெற்ற உஞ்சவிருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரிச் செயலா் எஸ். ரவீந்திரன் பாகவதா்களுக்கு நினைவு பரிசு வழங்கிக் கெளரவித்தாா். தொடா்ந்து இரவு திவ்யாநாமம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை ஸ்ரீ ஆஞ்சனேய உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.