திருச்சி

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில்ஓரிடத்தில் கூட வெல்லாத அதிமுக

23rd Feb 2022 04:29 AM

ADVERTISEMENT

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியடைந்தது.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள அனைத்து வாா்டுகளிலும் அதிமுக வேட்பாளா்கள் போட்டியிட்டனா். ஆனால், ஓரிடத்தில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. 15 வாா்டுகளில் திமுக 11 வாா்டுகளிலும், அமமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 2 வாா்டுகளிலும் வெற்றிப் பெற்றுள்ளனா். இந்தத் தோ்தலில் இப்பகுதியைச் சோ்ந்த அதிமுக நகரச் செயலரும், திமுக நகரச் செயலரும் தாங்கள் போட்டியிட்ட இடங்களில் தோல்வியடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT