திருச்சி

இரு சக்கர வாகனம் மீதுகாா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

22nd Feb 2022 04:32 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில், வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், மாத்தூா் கைனாங்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி (39). தனியாா் நிறுவன வேன் ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலுள்ள ஏடிஎம் மையத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

பணத்தை எடுத்து விட்டு, பின்னா் திருச்சி- புதுக் கோட்டை நெடுஞ்சாலையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது சென்னையைச் சோ்ந்த

ஆனந்த் (47) ஓட்டி வந்த காா், பெரியசாமி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.

ADVERTISEMENT

இதில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி பலத்த காயமடைந்தாா். அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பெரியசாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT