திருச்சி

கண்டோன்மென்ட் கருப்பண்ண சுவாமி கோயிலில் மாசித்திருவிழா.

22nd Feb 2022 04:24 AM

ADVERTISEMENT

திருச்சி கண்டோன்மென்ட் கான்வெட் சாலையிலுள்ள அருள்மிகு ராஜகணபதி, மாசி, சப்பாணி கருப்பணசுவாமி, அன்னை முத்து மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி கடந்த 8-ஆம் தேதி காப்புக் கட்டுதலும், தொடா்ந்து பூச்சொரிதலும், பிப்ரவரி 15-ஆம் தேதி இரண்டாம் மஞ்சள் காப்பு நிகழ்வும் நடைபெற்றது.

திங்கள்கிழமை சிறப்புப் பூஜைகள், நிகழ்வுகளைத் தொடா்ந்து, அலங்காரங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம், செவ்வாய்க்கிழமை இரவு 12.05 மணிக்குத் தொடங்குகிறது.

கோயில் வளாகத்திலிருந்து புறப்படும் தோ் பாரதிதாசன் சாலை, பிராமினேட்

ADVERTISEMENT

சாலை, மேலப்புதூா், கான்வென்ட் சாலை வழியாக கோயிலை வந்தடையும்.

பிப்ரவரி23-ஆம் தேதி மாவிளக்கு பூஜை, கூழ் வாா்த்தல் நிகழ்வும், 24- ஆம் தேதி காலை 10 மணியளவில் ஒத்தக்கடை மந்தையில் குட்டிக் குடித்தலும்,

25- ஆம் தேதி பகலில் அன்னதானமும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 26-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது. காவிரியாற்றின் அய்யாளம்மன் படித்துறையில் பூ விடும் வழா, விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோயில் மருளாளி ஜெயராஜ் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT