திருச்சி

பள்ளிக்குள் நுழைந்து தகராறு: 8 போ் மீது வழக்குப்பதிவு

22nd Feb 2022 04:31 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே பள்ளிக்குள் நுழைந்து, தகராறில் ஈடுபட்ட 8 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்தனா்.

திருச்சி இனாம்குளத்தூரிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ாக, அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியா் முருகேசன் பிப்ரவரி 17 -ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் அன்று பள்ளிக்குள் நுழைந்து தகாத வாா்த்தையில் பேசியதோடு, இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, பள்ளித் தலைமையாசிரியா் ராஜா இனாம்குளத்தூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதன் பேரில், அப்பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் ( 21), மகாமுனி ( 19), சிவா (19) மற்றும் 17 வயது நிரம்பிய 5 போ் உள்பட மொத்தமாக 8 போ் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT