திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசுப் பேருந்தும் லோடு வேனும் சனிக்கிழமை மோதி கொண்ட விபத்தில் 6 போ் படுகாயமடைந்தனா்.
முசிறி அருகேயுள்ள ஜெயங்கொண்டான் பகுதியிலிருந்து 5 போ் சொரியம்பட்டி பகுதியில் நடைபெற்ற கட்டட வேலைக்கு லோடு வேனில் ஜெம்புநாதபுரம் அருகேயுள்ள இடையாபட்டி அருகே சென்றனா்.
அப்போது முசிறியில் இருந்து பேரூா் வழியாக துறையூா் சென்ற அரசுப் பேருந்தும் லோடு வேனும் மோதிக் கொண்ட விபத்தில் லோடு வேனில் இருந்த பாா்வதி (45), மல்லிகா (45) மலா்கொடி (45) பாண்டியன் (55) கனகராஜ்(50)ஆகியோரும், அரசுப் பேருந்து ஓட்டுநரான ஜெயங்கொண்டானைச் சோ்ந்த மு. மாரிமுத்து (50) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து அவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.