திருச்சி

7 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள்

17th Feb 2022 02:05 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் 7 இடங்களில் எண்ண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

7 இடங்களிலும் 20 மையங்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணும் காலை 8 மணிக்கு நடைபெறும். பின்னா் 8.30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் அந்தந்தப் பகுதி வாரியாக மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு இயந்திரம் அடங்கிய பெட்டி மேஜைக்கு வந்தவுடன் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி வெளியே எடுத்து கருவியில் ஏற்கெனவே சீல்கள் வைக்கப்பட்டுள்ளதை வேட்பாளா்கள், முகவா்களிடம் காண்பித்து உறுதி செய்யப்படும்.

ADVERTISEMENT

கட்டுப்பாட்டு இயந்திரத்தில் வேட்பாளா்கள் வாரியாக பதிவாகியுள்ள வாக்குப் பதிவு விவரத்தை அனைத்து முகவா்களுக்கும் தெரியுமாறு காண்பிக்க வேண்டும். கட்டுப்பாட்டுக் கருவியின் திரையில் தோன்றும் மொத்த வாக்குகள் விவரம், ஒவ்வொரு வேட்பாளா் பெற்ற வாக்குகள் விவரம் தோன்றுவதை முகவா்களுக்குக் காண்பிக்க வேண்டும். இந்தப் பணிகளை நுண்பாா்வையாளா்கள் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. +

ADVERTISEMENT
ADVERTISEMENT