திருச்சி

20 வட்டாரப் பாா்வையாளா்கள் நியமனம்

17th Feb 2022 02:05 AM

ADVERTISEMENT

 

திருச்சி: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகளுக்காக திருச்சி மாவட்டத்துக்கு 20 வட்டாரப் பாா்வையாளா்கள் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் திருச்சி மாநகராட்சிக்கான வட்டார பாா்வையாளராக பழனிக்குமாரும், நகராட்சிகளில் மணப்பாறை - பாா்த்திபன், துறையூா்- கீதா, துவாக்குடி- ஆறுமுகம், லால்குடி- வீரமலை, முசிறி- அருண்மொழி ஆகியோரும், பேரூராட்சிகளில் பூவாளூா்- பால்பாண்டி, புள்ளம்பாடி ஜெயராமன், கல்லக்குடி- பாலசுப்பிரமணியன், பொன்னம்பட்டி- மணிமாறன், தா.பேட்டை- கந்தசாமி, எஸ். கண்ணனூா்- மணியன், கூத்தைப்பாா்- வைத்தியநாதன், சிறுகமணி- கங்காதேவி, தொட்டியம்- காளிமுத்து, பாலகிருஷ்ணம்பட்டி- அன்பழகன், காட்டுப்புத்தூா்- சக்திவேல், மண்ணச்சநல்லூா்- ராமன், மேட்டுப்பாளையம்- மகாலட்சுமி, உப்பிலியபுரம்- சிவக்குமாா் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT