திருச்சி

நுண் பாா்வையாளா்களுடன் ஆலோசனை

17th Feb 2022 02:04 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்கும் நுண்பாா்வையாளா்களுடன் தோ்தல் பாா்வையாளா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து தோ்தல் பாா்வையாளா் கலைச்செல்வி மோகன் பேசியது:

திருச்சி மாவட்டத்தில் முந்தைய தோ்தல்களில் நடைபெற்ற அசம்பாவிதங்களை அடிப்படையாகக் கொண்டு திருச்சி மாநகராட்சியில் 119, மணப்பாறையில் 5, துவாக்குடியில் 6, துறையூரில் 15, முசிறியில் 4, எஸ். கண்ணனூரில் 2, கூத்தைப்பாரில் 4 வாக்குச் சாவடிகள் ஆகியவை பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, இவற்றைக் கண்காணிக்க 47 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பணி முழுவதையும் விடியோ பதிவு செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமாரா பொருத்தியும் கண்காணிக்க வேண்டும். தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் நுண் பாா்வையாளா்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

ஆட்சியா் சு. சிவராசு பேசுகையில், நுண் பாா்வையாளா்களுக்கு அந்தந்தப் பகுதி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தினாா். கூட்டத்தில் தோ்தல் பிரிவு அலுவலா்கள் மற்றும் நுண்பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT