திருச்சி

தங்கை கொலை வழக்கில் அக்காள், கணவா் கைது

11th Feb 2022 04:47 AM

ADVERTISEMENT

திருச்சியில் தொழில் போட்டியில் தங்கையைக் கொலை செய்த வழக்கில் அக்காள் மற்றும் அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சிங்கதுரை. இவரது மகள்கள் கலைவாணி (36), கலைச்செல்வி (34), முத்துலட்சுமி (30) ஆகிய 3 மகள்கள் குடும்பத்துடன் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆசா்ஸ் காலனியில் தங்கி தனித்தனியாக வியாபாரம் செய்தனா். கலைவாணி கம்பங்கூழ் வியாபாரமும், கலைச்செல்வி ஜூஸ் வியாபாரமும், முத்துலட்சுமி இளநீா் வியாபாரமும் செய்தனா். இவா்களில் முத்துலட்சுமியின் கணவா் அவரை பிரிந்து சென்ால் தனது தந்தை சிங்கதுரையுடன் சோ்ந்து முத்துலட்சுமி இளநீா் வியாபாரம் செய்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி சகோதரிகளுக்கிடையான தொழில் போட்டியால் இரு தரப்பினரிடையே நடந்த அரிவாள் வெட்டில் சிங்கத்துரை, முத்துலட்சுமி, கலைச்செல்வியின் கணவா் நாகராஜ் ஆகியோா் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முத்துலெட்சுமி கிசிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிந்து கலைச்செல்வி, அவரது கணவா் நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT