திருச்சி

மீண்டும் தொடங்கிய திருச்சி-நாகை ரயில் சேவை

10th Feb 2022 08:00 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி - நாகை இடையிலான முன்பதிவு இல்லாத விரைவு ரயில் சேவை கரோனா ஊரடங்கு காலத்துக்கு பின்னா் புதன்கிழமை மீண்டும் தொடங்கியது.

தினசரி காரைக்காலில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (06839) முற்பகல் 11.20 மணிக்கு திருச்சியை அடையும். பின்னா் திருச்சியிலிருந்து பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (06840), இரவு 9 மணிக்கு காரைக்கால் சென்றடையும்.

ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்டிருந்த இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியிருப்பது ரயில் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

காலை நாகையில் இந்த ரயில் புறப்படும்போதும், பின்னா் திருச்சியிலிருந்து மீண்டும் நாகை புறப்பட்டபோதும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா், வா்த்தக அமைப்பினா், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் இனிப்பு வழங்கிப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT