திருச்சி

துவரங்குறிச்சி அருகே விபத்து: விவசாயி பலி

10th Feb 2022 02:49 AM

ADVERTISEMENT


மணப்பாறை: மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.

சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் சு. வைரமுத்து (57). இவா் குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு காரில் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்த சென்ற தெற்கு தெத்தூா் விவசாயி செல்வம் (50) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வாகனத்தை ஓட்டி சென்ற அவரது நண்பா் ரா. சோலை (எ) ராஜேந்திரன் (29) பலத்த காயமடைந்து துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் செல்வத்தின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT