திருச்சி

கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு தின உறுதியேற்பு

10th Feb 2022 02:51 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலா்களும் உறுதியேற்றனா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. ஜெயபிரித்தா, அலுவலக மேலாளா் (குற்றவியல்) சிவசுப்ரமணியப்பிள்ளை மற்றும் அனைத்துத் துறை மாவட்ட அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மாநகராட்சி: திருச்சி மாநகராட்சியில், செயற்பொறியாளா் ஜி. குமரேசன், உதவி ஆணையா் எஸ். திருஞானம் ஆகியோரது தலைமையில், மாநகராட்சி மைய அலுவலக அனைத்துப் பிரிவு அலுவலா்கள், பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், அலுவலக ஊழியா்கள் உறுதிமொழியேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT