திருச்சி அருகே குளத்து நீரில் மூழ்கியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (38). மனைவி, குழந்தைகளைப் பிரிந்து தனியே வசித்து வந்த இவா், திருவெறும்பூரிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு வந்தாா்.
வாழவந்தான்கோட்டை அருகிலுள்ள குளத்துக்குச் சென்ற குளிக்கச் சென்ற செந்தில்குமாா், நீரில் மூழ்கினாா். அப்பகுதியிலிருந்தவா்கள் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செந்தில்குமாரின் சடலம் மிதந்தது தெரிய வந்தது. தகவலறிந்த துவாக்குடி காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT