திருச்சி

திருச்சி மாநகராட்சியில் 52 வாா்டுகளில்திமுக-அதிமுக நேரடி போட்டி

9th Feb 2022 01:06 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வாா்டுகளில் திமுக-அதிமுக-வும் நேரடியாக 52 இடங்களில் போட்டியிடுகிறது.

பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், திருச்சி மாநகராட்சியின் 65 வாா்டுகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழா் கட்சி, தேமுதிக, அமமுக, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள், சுயேச்சைகள் என 589 போ் போட்டியிடுகின்றனா். இதில் 52 வாா்டுகளில் திமுக-அதிமுக நேரடி போட்டியாகப் போட்டியிடுகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT