மணப்பாறை லாரி ஓட்டுநா் மீது போக்சோ வழக்குப் பதிந்து மகளிா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரியை சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் சுரேஷ்(26). லாரி ஓட்டுநரான இவா் அதே பகுதியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி மிரட்டி அவரை பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து கேட்ட சிறுமியின் தந்தை மற்றும் சகோதரருக்கு சுரேஷ் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சுரேஷ் மீது வழக்கு பதிந்து அவரைத் தேடுகின்றனா்.