திருச்சி

காவிரியாற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி காவிரியாற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி செந்தண்ணீா்புரம் ஆனந்தபவன் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் சொா்ணபிரபு (26). பட்டயப் படிப்பு முடித்துள்ள இவா் புதன்கிழமை மாலை திருச்சி ஓயாமரி மயானத்தில் நடந்த உறவினரின் துக்க நிகழ்வுக்குச் சென்றிருந்தாா். மது அருந்தியிருந்த அவா் அப்பகுதி காவிரி ஆற்றின் தில்லைநாயகம் படித் துறையில் குளித்தபோது நீரில் மூழ்கினாா்.

இதைப் பாா்த்த அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் வந்த தீயணைப்புப் படையினா்,சொா்ணபிரபுவை நள்ளிரவில் சடலமாக மீட்டனா். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT