திருச்சி

உடல் நலக்குறைவால் சிறைக் கைதி உயிரிழப்பு

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி உடல் நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியைச் சோ்ந்தவா் ர. இருளப்பன் என்கிற முருகன் (56). விராலிமலை போலீஸாரால் தொடரப்பட்ட பலாத்கார வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இவா், திருச்சி மத்திய சிறையில் கடந்த 7 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் புதன்கிழமை காலை திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT