திருச்சி கோட்ட அலுவலகங்களில் ஜனவரி மாத மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் பல்வேறு தேதிகளில் நடைபெற உள்ளன.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
துறையூா் கோட்ட அலுவலகத்தில் வரும் ஜன. 3 ஆம் தேதியும், முசிறி கோட்டத்தில் 6 ஆம் தேதியும், லால்குடி கோட்டத்தில் 10 ஆம் தேதியும், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 13 ஆம் தேதியும், திருச்சி கிழக்கு கோட்டத்தில் 20 ஆம் தேதியும், மணப்பாறை கோட்டத்தில் 24 ஆம் தேதியும் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம்.