திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் பரமபதவாசல் திறப்பு: திருச்சிக்கு ஜன. 2-இல் உள்ளூா் விடுமுறை

18th Dec 2022 02:52 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் பரமபதவாசல் திறக்கப்படும் நாளான ஜன.2ஆம் தேதி திருச்சிக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் ஜன. 2ஆம் தேதி அதிகாலை திறக்கப்படவுள்ளது. இதன்காரணமாக, திருச்சிக்கு அன்றையதினம் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும். எனினும், பள்ளி- கல்லூரி தோ்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. அதேபோல், அரசின் அனைத்து துணைக் கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் குறைந்த பணியாளா்களைக் கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.7ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT