திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவா்கள் முடிவு சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில், மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டிச. 8ஆம் தேதி முதல் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றவா்கள் பட்டியல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில், காண் கலை, இசைக்குழு, நாதசங்கமம், டிரம்ஸ் போட்டியில் மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா். காண் கலை நவீன ஓவியப் போட்டியில் டி.திணேஷ் முதலிடமும்,
ரவிக்குமாா் இரண்டாமிடமும் பெற்றனா். டிரம்ஸ் வாசித்தல் போட்டியில் ராகேஷ் வா்மா முதலிடமும்,
இசைக்குழு போட்டியில் இம்தியாஸ் குழுவினா் முதலிடமும், நாதசங்கமம் போட்டியில் கெளதம் குழுவினா் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வாகினா்.
இதையடுத்து, பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி தலைமையாசிரியா் சி.தண்டபாணி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.