திருச்சி

இருசக்கர வாகனங்கள் மோதல்: ரயில்வே பெண் ஊழியா் பலி

11th Dec 2022 12:12 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ரயில்வே பெண் ஊழியா் உயிரிழந்தாா்.

திருச்சி, கீழகல்கண்டாா் கோட்டையைச் சோ்ந்தவா் மஞ்சுமித்ரா (39). பொன்மலை ரயில்வே பணிமனை டீசல் பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா், முதன்மை பணி மேலாளா் அலுவலகத்துக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டாா். சனிக்கிழமை வழக்கம்போல பணிக்குச் செல்ல இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம், மஞ்சுமித்ரா மீது மோதியது. இதில், நிலைநடுமாறி கீழே விழுந்தவா் மஞ்சுமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் சிக்கிய மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரும் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT