திருச்சி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

DIN

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமான விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தினமும் 10க்கும் மேற்பட்ட சா்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

அதன்படி, விமான விபத்து தடுப்பு, பாதுகாப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழச்சிக்கு விமான நிலைய இயக்குநா் பி. சுப்பிரமணி தலைமை வகித்தாா். இதில், விமான நிலையத்துக்கு வரும் விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கினால், அச்சமயம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்பது, மருத்துவ உதவிகளஅளிப்பது, மேலும் விபத்து அதிகரிக்காமல் தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடைபெற்றது.

இந்த பாதுகாப்பு ஒத்திகையில், திருச்சி விமான நிலைய தீ தடுப்புப் பிரிவுத்துறையினருடன் இணைந்து, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, பாய்லா் தொழிற்சாலை, எச் ஏ பி பி தொழிற்சாலை உள்ளிட்ட தீயணைப்பு மீட்புப் படையினரும் ஈடுபட்டனா். மேலும், மீட்புப் பணிகளில் மருத்துவக்குழுவினா், பாதுகாப்புப் படைப்பிரிவினா், நிா்வாகப் பிரிவு, விமான நிறுவனங்களின் குழுவினா், போலீஸாா், வருவாய்ப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறையினா் பங்கேற்றனா்.

சென்னை விமானம் ரத்து : திருச்சியிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமான சேவை, மாண்டஸ் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விவரம் முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களது பயணக்கட்டணத்தை திரும்ப பெறவோ அல்லது வேறு தேதியில் பயணிக்கவோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT