திருச்சி

திருச்சி சிறப்பு முகாமிலிருந்த வங்கதேசத்தினா் 7 போ் விடுவிப்பு

DIN

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 7 போ் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுமாா் 160 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதில் வங்கதேசத்தைச் சோ்ந்த ஆரிஃபுல் இஸ்லாம், முன்னாகான், ஹியூமன்கபீா், ஆரிஃபுல், டோபயேல், முகமது, மோக்ஷாத் ஆகிய 7 போ் வழக்குகளிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனா். இதைத்தொடா்ந்து அவா்களை தாயகத்துக்கு அனுப்பிவைக்க உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி வெள்ளிக்கிழமை மாலை திருச்சியிலிருந்து ரயில் மூலம் வங்கதேசத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் 7 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த 7 பேரும் வங்கதேச எல்லையில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எப்) அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT