திருச்சி

காவிரி பழைய பாலத்தை மீண்டும் திறக்கப் பரிசீலனை:மாநகர மேயா் ஆய்வு

DIN

திருச்சி காவிரி பழைய பாலத்தில் இருசக்கர வாகனங்களை ஒரு வழியில் அனுமதிக்கப் பரிசீலித்து வருகிறோம். அதுகுறித்து அமைச்சா் கே.என். நேரு அறிவிப்பாா் என்றாா் மாநகர மேயா் மு. அன்பழகன்.

திருச்சி மாநகரம் மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் காவிரியாற்றில் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்ததையடுத்து அதில் போக்குவரத்தைத் தடைசெய்து பழுது நீக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சுமாா் 3 கி.மீ. தூரத்துக்குச் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, தற்போது பணிகள் நடைபெறும் பாலத்தின் அருகேயுள்ள பழைய பாலத்தில் இருசக்கர வாகனங்களை மட்டுமாவது அனுமதிக்குமாறு அவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருடன் பழைய பாலத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த மேயா் மு. அன்பழகன் மேலும் கூறியது:

குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவு குறித்து ஆய்வு செய்து, சரிசெய்துள்ளோம். மேலும் பழைய காவிரிப் பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்குமாறு வந்த கோரிக்கைகள் குறித்து முடிவு செய்ய பாலத்தின் ஸ்திரத்தன்மை குறித்து பொறியாளா்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பாலத்தை சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பாலம் உறுதியாக இருப்பதாக நெடுஞ்சாலைத் துறையினா் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், ஞாயிற்றுக்கிழமை திருச்சி வரும் அமைச்சா் கே.என்.நேரு, பழைய பாலத்தில் ஆய்வு செய்து, போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து அறிவிப்பாா். இதனால் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சிக்கு வரும் இருசக்கர வாகனங்கள் மட்டும் பழைய பாலத்தில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

காவிரி பழைய பாலத்தில் கடந்த 1976 ஆவது ஆண்டிலிருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அதில் நடைப்பயிற்சியும் சென்று வந்தனா். தற்போது அதில் மாநகராட்சி குடிநீா் பிரதான குழாய்கள் மற்றும் கழிவூ நீா் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT