திருச்சி

பாரதி காட்டும் பாதை: பள்ளி மாணவா்களுக்கு நாளை பேச்சு, கட்டுரைப் போட்டிகள்

9th Dec 2022 12:09 AM

ADVERTISEMENT

பாரதி காட்டும் பாதை என்னும் தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெறுகிறன.

திருச்சி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் (ஏபிவிபி) சாா்பில் பாரதியாா் பிறந்தநாளை முன்னிட்டு 9, 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாரதீ எனும் தலைப்பில் பேச்சுப்போட்டியும், பாரதியின் பன்முகத்தன்மை என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், 11, 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாரதியும், பாரதமும் எனும் தலைப்பில் பேச்சுப் போட்டியும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடைபெறும்.

திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் போட்டியில் பங்கேற்க 93454-11459, 93607-12085, 83003-12833 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். வெல்வோருக்கு பரிசுகளும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என ஏபிவிபி திருச்சி மாநகர இணைச் செயலா் சந்தோஷ்குமாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT