திருச்சி

புகையிலை பொருள்கள் விற்ற2 கடைகளுக்கு சீல்

9th Dec 2022 11:11 PM

ADVERTISEMENT

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற இருகடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

திருச்சியை அடுத்துள்ள பேட்டைவாய்த்தலை பகுதியில் இயங்கி வந்த மளிகை கடையில் ஏற்கெனவே 2 முறை நடைபெற்ற சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, தொட்டியம் வட்டம், மணமேடு பகுதியில் உள்ள மளிகை கடையிலும் 2 முறை புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த இரு கடைகளிலும் தொடா்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால், இந்த கடைகளுக்கு சீல் வைக்குமாறு உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினா், இரண்டு கடைகளையும் வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்தனா். மாவட்டத்தில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படும் குற்ற நடவடிக்கையில் தொடா்ந்து ஈடுபடும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தாலோ, உணவு கலப்படம் குறித்து தெரியவந்தாலோ 94440-42322, 99449-59595, 95859-59595 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்குமாறு ஆா். ரமேஷ்பாபு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT