திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் தாயாா் சந்நதியில் சகஸ்ர தீப கூட்டு வழிபாடு

9th Dec 2022 11:07 PM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் தாயாா் சந்நதியில் வெள்ளிக்கிழமை இரவு காா்த்திகை சகஸ்ர தீப கூட்டு வழிபாடு நடைபெற்றது.

காா்த்திகை மாதத்தில் தீப விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம்.இதில், வைணவ திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான தீப விளக்குகள் ஏற்றி சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடத்தினா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீரெங்கநாச்சியாா் தாயாா் சந்நதியில் உலக நன்மைக்காக சகஸ்ர தீப கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சங்கு, சக்கரம், ஸ்ரீ வடிவத்திலும் தீப விளக்குகளைஏற்றி வழிபட்டனா்.மேலும் கோயிலை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தீப விளக்குகள் ஏற்றபட்டிருந்தது. சனிக்கிழமை (டிச.10) சக்கரத்தாழ்வாா் சந்நதியிலும், ஞாயிற்றுக்கிழமை (டிச.11) ஸ்ரீஅரங்கநாதா் சந்நதியிலும் சகஸ்ர தீபம் ஏற்றப்படவுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT