திருச்சி

பள்ளி மாணவா்களுக்கான கலைப் போட்டிகள் தொடக்கம்

DIN

அரசுப் பள்ளி மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக, பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாவட்ட அளவிலான 3 நாள் கலைத் திருவிழாப் போட்டிகள் திருச்சியில் புதன்கிழமை தொடங்கின.

ஏற்கெனவே, பள்ளி, வட்டார அளவிலும் வெற்றி பெற்ற மாணவா்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனா். 9, 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முதல்நாள் போட்டிகள், செயிண்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, பிலோமினாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றன.

இசைச் சங்கமம், இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை தோல் கருவி, துளை காற்றுக்கருவிகள், தந்திக் கருவிகள், நாடகம், மொழித்திறன், நடனம் முதலிய பல்வேறு வகையான போட்டிகளில் 3,100 மாணவா், மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

இரண்டாவது நாளாக 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆா்.சி. மேல்நிலைப்பள்ளி, செயிண்ட் ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளி, வாசவி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை போட்டிகள் நடைபெறுகின்றன. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும்

மாணவா்களுக்கு பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை போட்டிகள் நடைபெறும். முதன்மைக் கல்வி அலுவலா் ர. பாலமுரளி இதைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT