திருச்சி

11, 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது

DIN

திருச்சி தென்னூரில் பதுக்கப்பட்டிருந்த 11,250 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் சவேரியாா் கோயில் தெரு அருகே ரேஷன் அரிசி பதுக்கியிருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி ஆய்வாளா் கோபிநாத், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்குச் சென்று பாா்த்தபோது 4 மினி லாரிகளில் ரேஷன் அரிசி பதுக்கியிருந்த 5 பேரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், திருச்சி பொன்மலையை சோ்ந்த ஷேக் முக்தாா் (52), தென்னூா் சவேரியாா் கோயில் தெரு மதியழகன் (47), திருச்சி சீனிவாசன் நகா் முத்துக்குமாா் (30), அரியமங்கலம் ஈஸ்வரன் (24), அண்ணா நகா் ஆறுமுகம் (24) என்பதும்,

ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த சாதிக் பாட்ஷாவிடம் இவா்கள் பணியாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் 225 மூட்டைகளில் இருந்த தலா 50 கிலோ எடையில் இருந்த 11,250 கிலோ ரேஷன் அரிசி, ரூ.82,000 ரொக்கம், வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். தலைமறைவான சாதிக் பாட்ஷாவை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT