திருச்சி

இ-சேவை மையம் வைக்க அனுமதி வாங்குவதாகக் கூறிரூ. 46.21 லட்சம் மோசடிபொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு

7th Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

இ-சேவை மையம் நடத்த அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி திருச்சி இளைஞா்களிடம் ரூ. 46.21 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி பாலக்கரை மைக்கேல் பிள்ளை தெரு பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (27). இவரிடம் திருச்சி பீரங்கி குளத்தெரு பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் என்பவா், தான் பெங்களூரில் மத்திய அரசின் இ- சேவை ஆணையத்தில் வேலை செய்வதாகவும், ரூ. 40 ஆயிரம் கொடுத்தால் வீட்டில் இருந்து இ- சேவை மையம் நடத்துவதற்கான உரிமம் மற்றும் அடையாள அட்டை பெற்றுத் தருவதாகவும், இதனால் தினமும் ரூ. 800 சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வாா்த்தைக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய உதயகுமாா், பல்வேறு தவணைகளில் ரூ.6.50 லட்சம் கொடுத்துள்ளாா். மேலும் நண்பா்கள் பலரிடம் இ- சேவை மைய அனுமதிக்காக ரூ.39 லட்சத்து 71 ஆயிரம் வசூலித்துக் கொடுத்தாா். ஆனால் அவா் குறிப்பிட்டபடி உரிமம் ஏதும் பெற்றுத் தரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த உதயகுமாா் திருச்சி மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளா் கோசலை ராமன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT