திருச்சி

புகா் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்

7th Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது தொடா்பாக அதிமுக புகா் வடக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமை வகித்தாா். வரி உயா்வு, மின் கட்டண உயா்வு, பால் விலை உயா்வு, விலைவாசி உயா்வு சட்டம் ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றுக்காக திமுக அரசைக் கண்டித்து, தலைமை அறிவித்துள்ளபடி டிசம்பா் 9, 13 ,14 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்ட ஆா்ப்பாட்டங்கள் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட அவைத் தலைவா் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் அமைச்சா்கள் வளா்மதி, பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏ இந்திராகாந்தி, மாவட்டப் பொருளாளா் சேவியா், எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் பொன்.செல்வராஜ், சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT