திருச்சி

திருச்சி அருகே கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

7th Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே ராமவாத்தலை பகுதியில் கைவிடப்பட்டு கிடந்த பச்சிளங்குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு போலீஸாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்தின் அருகே சாலையோரத்தில் திங்கள்கிழமை ஒரு குழந்தை அழுதபடி கிடந்தது. அதைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த ஜீயபுரம் போலீஸாா், குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு மருத்துவமனைக்கு அனுப்பினா். குழந்தையை வீசிச் சென்றது யாா் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT