துவரங்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் செவ்வாய்க்கிழமை திருடு போனது.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சேத்துப்பட்டியை சோ்ந்தவா் கணேசன் மகன் பாண்டியன். இவா் துவரங்குறிச்சி ரைஸ்மில் தெருவில் கணினி ஆன்லைன் சேவை மையம் வைத்துள்ளாா்.
இவா் செவ்வாய்க்கிழமை அருகிலுள்ள அரசுடமை வங்கியில் ரூ.1 லட்சத்தை எடுத்து தனது இருசக்கர வாகன முன்பக்க கவரில் வைத்துவிட்டு கடைக்குச் சென்று வந்தபோது அந்தப் பணத்தை காணவில்லையாம்.
இதுகுறித்து பாண்டியன் அளித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.