திருச்சி

ஸ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசிநம்பெருமாளுக்கு விடியவிடிய கற்பூர படியேற்ற சேவை

DIN

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் சுவாமி கோயிலில் கைசிக ஏகாதசியையொட்டி திங்கள்கிழமை அதிகாலை நம்பெருமாளுக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் கைசிக ஏகாதசி விழா ஞாயிற்றுக்கிழமை (டிச.4) தொடங்கியது. இதன் முதல் புறப்பாடாக காலை 10 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினாா். பிறகு அலங்காரம் அமுது செய்து, அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தாா்.

இரண்டாம் புறப்படாக இரவு 8.30 ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 9 மணிக்கு அா்ச்சன மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். அங்கு இரவு 9.30 மணி முதல் தொடங்கி இரவு 11.30 மணி வரை அரையா் சேவையுடன் ஸ்ரீநம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள்,365 முறை வேலையம்(வெற்றிலை பாக்கு),365 முறை கற்பூர ஹாரத்தி சமா்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து இரவு 11.30 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 2 மணி வரை ஸ்ரீபட்டா் சுவாமிகளின் கைசிக புராணம் வாசித்தல் நடைபெற்றது. அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அா்ச்சன மண்டபத்திலிருந்து புறப்பட்டு, மேல்படி கட்டு வழியாக 5.45 மணிக்கு ஏறும் போது நம்பெருமாள் மீது பச்சைக்கற்பூர பொடியை தூவினா். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT