திருச்சி

பாபா் மசூதி இடிப்பு தினம்: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

DIN

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையங்களில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

டிசம்பா் 6 ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட பாதுகாப்புப் படை ஆணையா் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ரயில்வே பாதுகாப்புப் படை டி.எஸ்.பி. கிருபாகரன், ஆய்வாளா் தெய்வேந்திரன் மேற்பாா்வையில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், ரயில்வே போலீஸாரும் இணைந்து மெட்டல் டிடெக்டா் மூலம் பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்குமிடம், பயணிகள் அதிகம் நடமாடும் பகுதிகளை வெடிகுண்டு நிபுணா்களை கொண்டு தீவிரமாக சோதனையிட்டனா்.

தொடா்ந்து, திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்த ஜனசதாப்தி ரயில் உள்பட அனைத்து ரயில்களிலும் பயணிகளின் உடைமைகளும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. இவைதவிர ரயில் தண்டவாளங்கள், நடைமேடைகள் என அனைத்துப் பகுதிகளும் தீவிர சோதனை நடைபெற்றது. திருச்சி வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதே போல, நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள கோயில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட மற்றும் மாநகர எல்லைகள், சிக்னல்களில் வாகனங்களை போலீஸாா் தீவிர சோதனை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT