திருச்சி

கொலை வழக்குகளில் தொடா்பு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சியில், கொலை வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடந்த அக்.25 ஆம் தேதி முடுக்குப்பட்டியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதேபகுதி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த எச்.தா்மன் (எ) தா்மராஜ் (69) என்பவரை கண்டோன்மென்ட் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த செப்.29 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள உணவகத்தில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக தஞ்சாவூா் மாவட்டம், பட்டுகோட்டை சூரப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த அ.குமாா் (எ) அழகேசன் (40) என்பவரை அரசு மருத்துவமனை வளாக போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது தஞ்சாவூரில் பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவா்கள் பொதுமக்களின் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் திங்கள்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT