திருச்சி

அரசு மருத்துவமனைகளில் உயா்சிகிச்சைக்கான கட்டமைப்புகளை உருவாக்க கோரிக்கை

6th Dec 2022 03:52 AM

ADVERTISEMENT

தமிழக அரசு மருத்துவமனைகளில் அனைத்து உயா்சிகிச்சை சிறப்பு பிரிவுகளும் செயல்படக்கூடிய வகையிலான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அரசு மருத்துவா்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வா், சுகாதாரத்துறை செயலா் உள்ளிட்டோருக்கு அரசு மருத்துவா்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில அமைப்புச்செயலாளா் அருளீஸ்வரன் அனுப்பியுள்ள மனுவின் விவரம்: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவா் என்ற விகிதத்தை விடவும் குறைவாக சுமாா் 580 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற நிலையில் தமிழகம், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இந்நிலையில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதால் பொது மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக, புதிய 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில்

இருந்து நோயாளிகள் உயா் சிறப்பு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்வதை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பழைய 25 மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து உயா்சிறப்பு மருத்துவப் பிரிவுகளும் செயல்பட கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதனால் மக்களுக்கு அலைச்சல், நேரம், பண விரயம் குறைவதுடன், அரசுக்கும் நல்ல பெயா் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT