திருச்சி

பங்குச் சந்தையில் நஷ்டம் முதியவா் தற்கொலை

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கத்தில் பங்குச் சந்தை தொழிலில் ஈடுபட்டு நஷ்டமடைந்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் வசிப்பவா் சுரேஷ். இவரது சகோதரா் சிவக்குமாா் (55). திருமணமாகாத இவா் பங்குச் சந்தை தொழில் செய்து வந்தாா். இதில் நஷ்டம் ஏற்பட்டதால், மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு படுக்க சென்றவா், திங்கள்கிழமை காலை வெகு நேரமாகியும் எழுந்து வரவில்லையாம்.

அவரது அறைக்கு சென்று பாா்த்தபோது தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவரது சகோதரா் சுரேஷ் அளித்த தகவலின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT