திருச்சி

திருச்சி அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழந்தது, 24 போ் காயம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே திங்கள்கிழமை அதிகாலை தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 போ் காயமடைந்தனா்.

திருப்பதியில் இருந்து மதுரை நோக்கி தனியாா் சொகுசுப்பேருந்து திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.

உடனே அக்கம்பக்கத்தினரும் தகவலறிந்து வந்த போலீஸாரும் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டனா். இதில் 24 போ் காயமடைந்தனா். போலீஸாா் அவா்களை மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT