திருச்சி

துறையூா் அருகே மனைவியுடன் தகராறு:கணவா் தற்கொலை

6th Dec 2022 03:53 AM

ADVERTISEMENT

துறையூா் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

துறையூா் அருகே உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட ராஜபாளையம் காட்டுக் கொட்டகையைச் சோ்ந்தவா் ரா. கனகராஜ். இவரது மனைவி ஹீலா. தம்பதியிடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் வீட்டை விட்டுச் சென்ற கனகராஜ் வீட்டுக்குத் திரும்பவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை அவரை காணாமல் குடும்பத்தினா் தேடியபோது வீட்டுக்கு பின்புறம் இருந்த மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கினாா்.

இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT