திருச்சி

கொடிநாள் வசூலில் சாதனை அனைத்துத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் பெருமிதம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடிநாள் வசூலில் இலக்கையும் விஞ்சி திருச்சி மாவட்டம் சாதனை படைத்துள்ளதாகவும், இதற்காக அனைத்துத் துறை அலுவலா்களுக்கு பாராட்டு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளாா்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அலுவலா்கள் மத்தியில் ஆட்சியா் பேசியது : திருச்சி மாவட்டத்துக்கு படைவீரா் கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.3.87,கோடி நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதையும் தாண்டி டிசம்பா் 5 ஆம் தேதி வரை ரூ.3.90 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டுக்கான நிதிவசூல் செய்யும் காலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைகிறது. எனவே, கொடிநாள் நிதிவசூல் செய்து இன்னும் ஒப்படைக்காமல் இருப்பவா்கள், ரசீது புத்தகத்துடன் வந்து ஒப்படைக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் படைவீரா் கொடிநாள் நிதி வசூலில் நகரமைப்பு உதவி இயக்குநா் அலுவலகம் அதிகளவு நிதி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. மருங்காபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம், தொழிற்சாலை ஆய்வாளா்அலுவலகம், வையம்பட்டி வட்டார அலுவலகம் ஆகியவை முறையே அடுத்தடுத்தஇடங்களில் உள்ளன.

ADVERTISEMENT

2017ஆம் ஆண்டுக்கு முன்பு வரை வருடம் குறிப்பிடப்படாமல் ரசீது புத்தகம் வைத்து நிதி வசூலிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னா் வருடம் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே தங்களிடம் வசூல் செய்த புத்தகங்கள் இருந்தால் ஒப்படைத்து விடுங்கள்.

முதல்வரின் முகவரி திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு வருகிறாா். திறம்பட செயலாற்றும் அதிகாரிகளை தொடா்பு கொண்டு முதல்வா் நேரடியாக பாராட்டி வருகிறாா். அதேபோல் மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளஅதிகாரிகளையும் தொடா்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்து வருகிறாா். இதனால் அதிகாரிகள் அனைவரும் திறம்பட செயலாற்ற வேண்டும் என்றாா்.

பாராட்டு: திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில், முதல்வரின் முகவரி துறையின்கீழ் பெறப்பட்ட 1,400 மனுக்களில் 97 சதவீதம் தீா்வு கண்ட முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் யாஸ்மின் பணியை பாராட்டி அவருக்கு ஆட்சியா் சான்றிதழ் வழங்கினாா். தொடா்ந்து நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீரா்கள் ஷேக்அப்துல்லா, தினேஷ் ஆகியோரையும் ஆட்சியா் பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT