திருச்சி

திருச்சி ரயில்நிலையத்தில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்த சென்னையைச் சோ்ந்தவா் கைது

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்ட போது, 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ரயில்வே போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சென்னை அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன் (46) என்பதும், அவா் வைத்திருந்த பையில் சுமாா் 3 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த நபரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT