திருச்சி

சாலைகளில் திரியும் மாடுகளை முறைகேடாக விற்பனை ஒப்பந்ததாா்கள் மீது புகாா்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் ஒப்பந்தக்காரா் அவற்றை முறைகேடாக விற்பனை செய்வதாக குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மேயா் மு. அன்பழகன் பெற்றுக் கொண்டாா்.

இதில், திருச்சி மாநகரில் மாடு வளா்ப்போா்கள் சாா்பில் அளிக்கப்பட் மனுவில், மாநகரில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரா் இரவு நேரங்களில் மட்டுமே சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கின்றனா். அவற்றை வாகனத்தில் ஏற்றும் போது மாடுகளுக்கு காயம் ஏற்படுகிறது. பிடித்துச் செல்லும் மாடுகளை முறைகேடாக விற்பனை செய்வதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு முறையாக உணவு கொடுப்பதில்லை, மாட்டின் உரிமையாளா்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT