திருச்சி

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

6th Dec 2022 03:52 AM

ADVERTISEMENT

மின்வாரிய ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மன்னாா்புரம் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் வட்ட தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். இதில், மாநிலத் தலைவரும், சிஐடியு மாவட்டச் செயலாளருமான எஸ்.ரெங்கராஜன் கண்டன உரையாற்றினாா்.

இதில், மின்வாரிய ஊழியா்களுக்கு கடந்த 2019 டிச. 1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும். அவுட்சோா்சிங் என்ற பெயரில் தனியாா்மயத்தை புகுத்தக் கூடாது. ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடுப்புக் கால பணப்பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், வட்டச் செயலாளா் செல்வராஜ், சிஐடியு நிா்வாகிகள் பழனியாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் ஜனவரி 5 ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT